தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. Gold price today reach rs 70000
தங்கம் விலை கடந்த வாரம் இறுதி முதல் குறைந்து வந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
அன்றைய தினம் மட்டும் கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து இருந்தது. அதாவது ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது.
தொடர்ச்சியாக நேற்று (ஏப்ரல் 10) கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி, கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,745-க்கும் சவரனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது.
கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டது.
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold price today reach rs 70000