தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. நேற்றும் நேற்று முன் தினமும் 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 4,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு பவுன் தங்கம் விலை 37,568 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை 25) தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து ஒரு சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு பவுன் தங்கம் 37,568 ரூபாயிலிருந்து 37,760 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னையில் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5,122க்கும் ஒரு சவரன் ரூபாய் 40,976க்கும் விற்பனையாகி வருகிறது.
பிரியா
