தங்கம் விலை இன்று (மே 12) இரண்டாவது முறையாக குறைந்துள்ளது.Gold price today decreased
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. தற்போது தங்கம் 70 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.
இன்று காலை தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,040-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக தங்கம் விலை இன்று பிற்பகலில் குறைந்துள்ளது.
2-வது முறையாக கிராமுக்கு 130 ரூபாயும் சவரனுக்கு 1,040 ரூபாயும் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.8,750-க்கும், ஒரு சவரன் ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மட்டும் தங்கம் விலை ரூ.2,360 குறைந்தது நகை பிரியர்களிடை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gold price today decreased