நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

Published On:

| By Balaji

கடந்த சில நாட்களாகச் சரிவுடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (மார்ச் 2) மளமளவெனக் குறைந்தது.

கொரோனா காலத்தில், தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்த நிலையில், அதன் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. சில சமயங்களில் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

மேலும் தங்கத்தின் விலை உயருமோ என்ற அச்சத்தில், ஒரு சில பெற்றோர் கடன் வாங்கி நகை வாங்கினர். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு ஆறுதல் தரக் கூடிய செய்தியாகத் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்தது. இந்த சூழலில் இன்று மளமளவென 608 ரூபாய் குறைந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.76 குறைந்து ரூ.4,266க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு தங்கம் வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதுபோன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72,000ஆக உள்ளது.

**-பிரியா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share