மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இனி நகை வாங்க முடியுமா?

Published On:

| By Kavi

gold price increase today

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இனி நகை வாங்க முடியுமா என நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர். gold price increase today

தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9,100-க்கும், ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை ஆனது.

நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295-க்கும், ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.9,320க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.74,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. . gold price increase today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share