தங்கம் விலை இன்று (மே 6) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. gold price increase second time
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. gold price increase second time
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ரூ.74,320 என ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது.
இதையடுத்து படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்தது. தொடர்ந்து இன்று காலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்தது.
அதன்படி, ஒரு கிராம் ரூ.125 உயர்ந்து ரூ.9,025-க்கும், ஒரு சவரன் ரூ.1,000 உயர்ந்து ரூ.72,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் விலை ரூ.75 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்கப்படுகிறது. gold price increase second time
