தங்கம் விலை அதிரடியாக உயர்வு!

By Kalai

|

Published on 4 Oct 2022, 11:12 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேயடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து இருக்கிறது. Gold price in Chennai

தங்கம் விலை  ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.

ADVERTISEMENT

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,640க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) சவரனுக்கு ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
Gold price in Chennai suddenly increased

ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து 4,775 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.560 அதிகரித்து ரூ.38,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளி 66.70 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 66,700 ரூபாக்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

கலை.ரா

பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த வாகனங்கள்!

பிரபுதேவா இயக்கத்தில் மஞ்சுவாரியார் : வைரலாகும் ‘கண்ணிலு கண்ணிலு’!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kalai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel