தங்கம் விலை 67,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. Gold price hits new high
அட்சய திருதியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கம் வாங்க பலரும் பணத்தை சேர்த்து வைத்து வருகின்றனர். இந்தநிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த 27-03-2025 அன்று 22 காரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 65,880க்கும், 28-03-2025 அன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 66,720 க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று (மார்ச் 32) இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 8,425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.113க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,13,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை உயர்வு நகை பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Gold price hits new high