1 சவரன் தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை நெருங்கியது!

Published On:

| By Kavi

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (செப்டம்பர் 2) ரூ.77,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தினசரி ஏறு முகத்தில் இருந்து வருகிறது. வார தொடக்க நாளான நேற்று (செப்டம்பர் 1) சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.77,640-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

இரண்டாவது நாளாக இன்றும் (செப்டம்பர் 2) விலை உயர்ந்துள்ளது.

கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து வந்தது. பின்னர் கடந்த 21ஆம் தேதியில் இருந்து விலை அதிகரித்து வந்து தற்போது ரூபாய் 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும் கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share