கடந்த சில நாட்களாக இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று(ஆகஸ்ட் 30) உயர்ந்து இருக்கிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,765க்கும், சவரன் ரூ.38,120க்கும் விற்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று(ஆகஸ்ட் 30) காலை அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.
கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து, ரூ.4,790 ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.38,320ஆகவும் விற்கப்படுகிறது.
வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு ரூ.280 குறைந்திருந்தது.
இதேபோன்று வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 60.10 காசுகளாகவும், ஒரு கிலோ ரூ. 60,100 ஆகவும் விற்பனையாகிறது.
கலை.ரா