புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை : ரூ.85 ஆயிரத்தை கடந்தது!

By Pandeeswari Gurusamy

|

Published on 23 Sep 2025, 3:42 PM

gold price crosses 85,000 in Chennai today

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை 85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் 1,680 வரை உயர்ந்துள்ளது.

தற்போதைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 23) காலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.560 ஆக உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,120 வரை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் 1,680 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.149க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel