சென்னையில் இன்று (நவம்பர் 5) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.70 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.11,180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து ரூ.89,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.163 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து ரூ.1,63,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 4 -11-2025 | 90,000 |
| 3 -11-2025 | 90,800 |
| 2 -11-2025 | 90,480 |
| 1 -11-2025 | 90,480 |
| 31 -10-2025 | 90,400 |
| 30 -10-2025 | 90,400 |
| 29 -10-2025 | 90,600 |
| 28 -10-2025 | 88,600 |
| 27-10-2025 | 91,600 |
| 26-10-2025 | 92,000 |
