சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று (ஜனவரி 5) ஒரே நாளில் ரூ.1280 வரை உயர்ந்துள்ள சம்பவம் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், போர் பதற்றங்கள், உலக அளவில் தங்கத்தின் தேவை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 1280 வரை உயர்ந்துள்ளது. வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்துள்ளது தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.80 உயர்ந்து ரூ. 12,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,02,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.10,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 8 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1 உயர்ந்து ரூ. 266க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.2,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 4-1-2026 | 1,00,800 |
| 3-1-2026 | 1,00,800 |
| 2-1-2026 | 1,00,640 |
| 1-1-2026 | 99,520 |
| 31-12-2025 | 99,840 |
| 30-12-2025 | 1,00,800 |
| 29-12-2025 | 1,04,160 |
| 28-12-2025 | 1,04,800 |
| 27-12-2025 | 1,04,800 |
| 26-12-2025 | 1,03,120 |
| 25-12-2025 | 1,02,560 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 4-1-2026 | 257 |
| 3-1-2026 | 257 |
| 2-1-2026 | 260 |
| 1-1-2026 | 256 |
| 31-12-2025 | 257 |
| 30-12-2025 | 258 |
| 29-12-2025 | 281 |
| 28-12-2025 | 285 |
| 27-12-2025 | 285 |
| 26-12-2025 | 254 |
| 25-12-2025 | 245 |
