சென்னையில் இன்று (டிசம்பர் 26) ஒரு கிலோ வெள்ளி ரூ.9,000 வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரிப்பு, போர் பதற்றங்கள், உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி ரூ.9 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.12,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 வரை உயர்ந்து ரூ. 1,03,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 65 உயர்ந்து ரூ. 10,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 9 உயர்ந்து ரூ. 254க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 9,000 உயர்ந்து ரூ. 2,54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 25-12-2025 | 1,02,560 |
| 24-12-2025 | 1,02,400 |
| 23-12-2025 | 1,02,160 |
| 22-12-2025 | 1,00,560 |
| 21-12-2025 | 99,200 |
| 20-12-2025 | 99,200 |
| 19-12-2025 | 99,040 |
| 18-12-2025 | 99,520 |
| 17-12-2025 | 99,200 |
| 16-12-2025 | 98,800 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 25-12-2025 | 245 |
| 24-12-2025 | 244 |
| 23-12-2025 | 234 |
| 22-12-2025 | 231 |
| 21-12-2025 | 226 |
| 20-12-2025 | 226 |
| 19-12-2025 | 221 |
| 18-12-2025 | 224 |
| 17-12-2025 | 222 |
| 16-12-2025 | 211 |
