சர்வதேச சந்தை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நாள்தோறும் புதிய உச்சத்தை கண்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பின் அதிரடியான சரிவை சந்தித்து வந்தது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 24) தங்கம் விலை அதிரடியாக ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ.11,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலை இன்று (அக்டோபர் 24) ரூ.3 குறைந்து ரூ.171க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 23-10-2025 | 92,000 |
| 22-10-2025 | 92,320 |
| 21-10-2025 | 96,000 |
| 20-10-2025 | 95,360 |
| 19-10-2025 | 96,000 |
| 18 -10-2025 | 96,000 |
| 17 -10-2025 | 97,600 |
| 16-10-2025 | 95,200 |
| 15-10-2025 | 94,880 |
| 14-10-2025 | 94,600 |
