சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ இன்று (டிசம்பர் 24) ஒரே நாளில் ரூ.10,000 வரை உயர்ந்துள்ள சம்பவம் முதலீட்டாளர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில இன்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 30 உயர்ந்து ரூ.12,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 240 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ. 10,675க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.244க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ. 2,44,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில் ஏழைகளின் தங்கம் என அழைக்கப்பட்ட வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 23-12-2025 | 1,02,160 |
| 22-12-2025 | 1,00,560 |
| 21-12-2025 | 99,200 |
| 20-12-2025 | 99,200 |
| 19-12-2025 | 99,040 |
| 18-12-2025 | 99,520 |
| 17-12-2025 | 99,200 |
| 16-12-2025 | 98,800 |
| 15-12-2025 | 1,00,120 |
| 14-12-2025 | 98,960 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 23-12-2025 | 234 |
| 22-12-2025 | 231 |
| 21-12-2025 | 226 |
| 20-12-2025 | 226 |
| 19-12-2025 | 221 |
| 18-12-2025 | 224 |
| 17-12-2025 | 222 |
| 16-12-2025 | 211 |
| 15-12-2025 | 215 |
| 14-12-2025 | 210 |
