தங்கம் வாங்க இன்று சரியான நாளா.. சர்வதேச அளவில் சந்தித்த வீழ்ச்சி விபரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold and silver rate on 22 october 25 in chennai

தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன் அதிரடியாக ஏற்றங்களை கண்ட தங்கம், வெள்ளி விலை நேற்றும் இன்றும் சற்றே சரிந்துள்ளது. நேற்று (அக்டோபர் 21) காலையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 2,080 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,440 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை இன்று (அக்டோபர் 22) ஒரு கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று (அக்டோபர் 22) ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து 180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கடும் வீழ்ச்சி

சர்வ தேச அளவில் தங்கம் 6.3 சதவிகிதம் சரிந்து ஒரு அவுன்ஸ் சுமார் 4,082 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த ஜூன் 2013ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது

ADVERTISEMENT

இதேபோல் வெள்ளி 8.7 தவிகிதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 47.89 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. இது பிப்ரவரி 2021ஆம் ஆண்டுக்கு பிந்தைய மிகப்பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
21-10-202596,000
20-10-202595,360
19-10-202596,000
18 -10-202596,000
17 -10-202597,600
16-10-202595,200
15-10-202594,880
14-10-202594,600
13-10-202592,640
12-10-202592,000
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share