நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக தங்கம் வரலாற்றில் தினமும் புது உச்சத்தை தொட்டு வந்தது. இந்நிலையில் நேற்றும், இன்றும் அதிரடியாக தங்கம் விலை குறையத் துவங்கி உள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் தற்போது ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 வரை குறைந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.3,680 வரை குறைந்துள்ளது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 21-10-2025 | 96,000 |
| 20-10-2025 | 95,360 |
| 19-10-2025 | 96,000 |
| 18 -10-2025 | 96,000 |
| 17 -10-2025 | 97,600 |
| 16-10-2025 | 95,200 |
| 15-10-2025 | 94,880 |
| 14-10-2025 | 94,600 |
| 13-10-2025 | 92,640 |
| 12-10-2025 | 92,000 |
