சென்னையில் இன்று (டிசம்பர் 17) சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ.11,000 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.11,000 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.10,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் ரூ.11 உயர்ந்து ரூ.222க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.11,000 உயர்ந்து ரூ. 2,22,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் தங்கம், வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 16-12-2025 | 98,800 |
| 15-12-2025 | 1,00,120 |
| 14-12-2025 | 98,960 |
| 13-12-2025 | 98,960 |
| 12-12-2025 | 98, 960 |
| 11-12-2025 | 96,400 |
| 10-12-2025 | 96,240 |
| 9-12-2025 | 96,000 |
| 8-12-2025 | 96,320 |
| 7-12-2025 | 96,320 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 16-12-2025 | 211 |
| 15-12-2025 | 215 |
| 14-12-2025 | 210 |
| 13-12-2025 | 210 |
| 12-12-2025 | 216 |
| 11-12-2025 | 209 |
| 10-12-2025 | 207 |
| 9-12-2025 | 199 |
| 8-12-2025 | 198 |
| 7-12-2025 | 199 |
