ADVERTISEMENT

ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை நிலவரம்.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver Rate On 13 November 2025

சென்னையில் இன்று (நவம்பர் 13) ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.200 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600க்கு விற்பனையான நிலையில், வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.200 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு பின் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது. ஆனால் சில நாட்களாக மீண்டும் தங்கம், வெள்ளி விலை ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.9000 உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1600 உயர்ந்து 94,400க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.9000 வரை உயர்ந்து ரூ.1,82,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
12-11-202592,800 
11-11-202593,600
10-11-202591,840
9 -11-202590,400
8-11-202590,400
7 -11-202590,160
6 -11-202590,560
5 -11-202589,440
4 -11-202590,000
3 -11-202590,800
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
12-11-2025173
11-11-2025170
10 -11-2025169
9 -11-2025165
8-11-2025165
7 -11-2025165
6 -11-2025165
5 -11-2025163
4 -11-2025165
3 -11-2025168
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share