ADVERTISEMENT

மீண்டும் உச்சம் தொடும் தங்கம், வெள்ளி.. நகை பிரியர்கள் அதிர்ச்சி

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver

ஒரு கிராம் தங்கம் விலை இன்று (டிசம்பர்.1) ரூ.12000த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4000 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தொடந்து பலமுறை ஏற்றங்களை சந்தித்து வந்த தங்கம் தீபாவளிக்கு முன் அக்டோபர் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் ரூ.200 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு பின்னர் தங்கம், வெள்ளி விலை படிப்படியாக சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4 வரை உயர்ந்துள்ளது

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.12,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 வரை உயர்ந்து ரூ.96,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

ஏழைகளின் தங்கம் என்று அழைக்கப்படும் வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.4 வரை உயர்ந்து ரூ.196க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தங்கம் ரூ. 4000 உயர்ந்து ரூ. 1,96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

30 -11-202595,840
29 -11-202595,840
28 -11-202594,720
27 -11-202594,160
26 -11-202594,400
25 -11-202593,760
24 -11-202592,160
23 -11-202593,040
22-11-202593,040
21-11-202591,680
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
30 -11-2025192
29 -11-2025192
28 -11-2025183
27 -11-2025180
26 -11-2025176
25 -11-2025174
24-11-2025171
23-11-2025172
22-11-2025172
21-11-2025169
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share