சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று (மார்ச் 25) ரூபாய் 160 அதிகரித்து ரூ.49,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 அதிகரித்து ரூ.6,205-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூபாய் 54,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 22 அதிகரித்து ரூ.6,769-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் விலை லேசாக குறைந்திருந்த நிலையில், தற்போது ஒரேயடியாக உயர்ந்து ரூபாய் 5௦,௦௦௦ எட்டிப் பிடித்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா அதிகரித்து இருக்கிறது.
இந்த விலை ஏற்றத்தினை பார்க்கும்போது தற்போது நகைக்கடை பக்கம் போகாமல் இருப்பது தான், நம்முடைய இதயத்திற்கும், பர்ஸுக்கும் நல்லதாக இருக்கும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய வன்னியர் கட்சி: அரசியல், சமூக மாற்றத்துக்கு வித்திடுமா?
கோவையில் அண்ணாமலை…கொடுக்கப்போவது என்ன விலை?
”கணேசமூர்த்தி உயிர்பிழைக்க 50-50 தான் வாய்ப்பு உள்ளது” : வைகோ கவலை!