GOLD RATE: லேசாக குறைந்த விலை… எல்லாமே கண் துடைப்பு தான்!

Published On:

| By Manjula

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (ஏப்ரல் 2) சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 குறைந்து ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூபாய் 56,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 27 குறைந்து ரூ.7,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜெட் வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது லேசாக குறைந்துள்ளது. என்றாலும் விலை ஏறிய அளவிற்கு குறையவில்லை என்பதால், இப்போது நகைகள் வாங்குவது நல்ல முடிவாக இருக்காது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 40 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 82,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் அளவுக்கு இல்லை என்றாலும், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ்-ஐ கொச்சைப்படுத்துகிறார்” : ஜி.கே.வாசன் விமர்சனம்!

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா

தொடரும் காட்டு யானை தாக்குதல் : மூன்று மாதங்களில் ஐந்தாவது மரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share