தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க தங்கம், வெள்ளியை விலையைக் கண்டு நகைபிரியர்களே நடுங்கும் அளவுக்கு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக தங்கம் விலை சவரனுக்கு 2000 ரூபாயும், வெள்ளி 13,000 ரூபாயும் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 250 குறைந்து ரூ.11,950க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 2000 குறைந்து, ரூ.95,600க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 272 குறைந்து ரூ.13,037க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 2,176 குறைந்து, ரூ.1,04,296க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையானது இன்று ஒரு கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 13,000 உயர்ந்து ரூ.1,90,000க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்த மாதம் ரூ.90 ஆயிரத்தை கடந்து ரூ.1 லட்சத்தை நெருங்கி வந்தது.
இன்னும் 2 நாட்களில் தீபாவளி வர உள்ள நிலையில், தங்கம், வெள்ளியின் விலை லட்சத்தை நோக்கி பெருமளவில் குறைந்தது நகைபிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
