சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 4) சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 46 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேற்று (மே 3) ஒரு சவரன் தங்கம் ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை விரைவில் 46 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்பது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.44 அதிகரித்து ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 அதிகரித்து ரூ.50,184-க்கும் ஒரு கிராம் ரூ.49 அதிகரித்து ரூ.6,273-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலைக்கு நிகராக வெள்ளி விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.82,800-க்கும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.82.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
அரைமணி நேரம் என்னிடம் பேசினார்: மனோபாலா மறைவிற்கு கண்கலங்கிய சூரி