சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 3) சவரனுக்கு ரூ.728 அதிகரித்து ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தினசரி விலை மாற்றம் அடைந்து வரும் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே கடுமையான விலையேற்றத்தில் இருந்து வருகிறது. சிறிதளவு விலை குறைவது போல் தெரிந்தாலும், அடுத்த நாளே அதிரடியாக விலை உயர்ந்து விடுகிறது.
நேற்று (மே 2) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று ரூ.728 அதிகரித்து ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.91 அதிகரித்து ரூ.5,706-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.792 அதிகரித்து ரூ.49,792-க்கும் ஒரு கிராம் ரூ.99 அதிகரித்து ரூ.6,224-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 அதிகரித்து ரூ.81,800-க்கும் ஒரு கிராம் ரூ.1.30 அதிகரித்து ரூ.81.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்: காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்!
