தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 19) சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நேற்று (மே 18) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.49,088-க்கும் ஒரு கிராம் ரூ.28 குறைந்து ரூ.6,136-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.100 குறைந்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் குறைந்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல்துறையில் பணி!

3 நாடுகள், 6 நாட்கள், 40 நிகழ்ச்சிகள் : வெளிநாடு புறப்பட்டார் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share