45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 31) சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் 44 ஆயிரத்தைக் கடந்த போதும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருவது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தைக் கடந்து விடுமோ என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மார்ச் 30) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,72-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 அதிகரித்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 அதிகரித்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

திரையரங்கில் தீண்டாமை: வெற்றிமாறன் கண்டனம்!

கலாஷேத்ரா பாலியல் புகார்: மாணவிகள் முதல்வருக்கு கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share