தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Minnambalam

gold and silver price today july 31 2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 31) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தினசரி தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்து விடுமோ என்று நகைப்பிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.48,440-க்கும் ஒரு கிராம் ரூ.16 குறைந்து ரூ.6,055-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.80,000-க்கும் ஒரு கிராம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

குக்கி – மெய்தி சமூக மக்கள் இனி சேர்ந்து வாழ முடியாது!: திருமாவளவன்

ரயிலில் துப்பாக்கிச் சூடு ஆர்.பி.எஃப் வீரர்: 4 பேர் பலி!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share