சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 28) சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.47,216-க்கும் ஒரு கிராம் ரூ.76 குறைந்து ரூ.5,902-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை அதிரடியாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.76,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.76.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
Tiger Ka Message: சல்மான் கானின் “TIGER 3” ப்ரோமோ வெளியானது!