தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 22-01-2024

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 22) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் ஒரு கிராம் ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

தமிழ்நாட்டில் வழிபாட்டு உரிமை மறுப்பு: மோடியை ‘டேக்’ செய்த நிர்மலா சீதாராமன்

ராமர் கோவில் திறப்பு: மோடி பயண விவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share