சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 16) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று விலை உயர்ந்து 45 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,635-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள வேளையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
’புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க தடை நீக்கம்… ஆனாலும் இது தவறு’: அன்புமணி
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?: அட்டவணை வெளியீடு!
