சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 13) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தினசரி தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை அதிகரித்து ரூ.43,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையில் வெள்ளி விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.75,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.75.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை!
சென்னையில் நவராத்திரி கொண்டாட்டம்: அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு!