ADVERTISEMENT

திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 12-01-2024

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 12) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சிறிதளவு அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் இந்த திடீர் விலை உயர்வு மக்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

நெல்லை மேயர் விவகாரம்: தங்கம் தென்னரசு, அன்பகம் கலை நடத்திய க்ளைமேக்ஸ் பஞ்சாயத்து!

உத்தரப்பிரதேசத்தில் ஒரே மாதத்தில் மேலும் ஐந்து விமான நிலையங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share