தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 07-12-2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 7) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தமிழகத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை கடந்த டிசம்பர் 4 அன்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து அதிர்ச்சியளித்தது. ஆனால் அடுத்த நாளே சவரனுக்கு ரூ.1000 குறைந்தது. தொடர்ந்து 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ.80,000-க்கும் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

தற்கொலைக்கு தூண்டியதாக ’புஷ்பா’ பட நடிகர் கைது!

டிஸ்சார்ஜ் ஆன செந்தில்பாலாஜி… புழல் சிறையில் மீண்டும் அடைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share