சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 5) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்று தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.78,000-க்கும் ஒரு கிராம் ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ: மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு இலவசம்!