ஒரு சவரன் தங்கம் விலை இன்று (செப்டம்பர் -9) ரூ.81,000த்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, டிரம்பின் புதிய வரி விதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (செப்டம்பர் -9) ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.720 உயர்ந்து ரூ. 81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் -9) ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,40,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை
நேற்று (செப்டம்பர் -8) காலையில் தங்கம் விலை சற்றே குறைந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.10,060க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.80,480க்கு விற்பனையானது.
