ADVERTISEMENT

நகை வாங்க ரெடியா.. சற்றே சரிந்த தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver


சென்னையில் இன்று (நவம்பர் 7) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 400 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை, புவிசார் அரசியல் சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 வரை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.11,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.90,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
6 -11-202590,560
5 -11-202589,440
4 -11-202590,000
3 -11-202590,800
2 -11-202590,480
1 -11-202590,480
31 -10-202590,400
30 -10-202590,400
29 -10-202590,600
28 -10-202588,600
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share