சென்னையில் இன்று (நவம்பர் 6) ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 வரை உயர்ந்துள்ளது.
உலகளாவிய தங்கத்தின் தேவை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் அக்டோபர் 17ம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரன் தங்கம் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு பின் தங்கம், வெள்ளி விலை அதிரடியான சரிவை சந்தித்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1120 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று மாலையில் 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.11,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.90,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்த நிலையில் இன்று மாலையும் ரூ. 1 உயர்ந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தங்கம் ரூ.1000 உயர்ந்து ரூ.1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2000 வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 5 -11-2025 | 89,440 |
| 4 -11-2025 | 90,000 |
| 3 -11-2025 | 90,800 |
| 2 -11-2025 | 90,480 |
| 1 -11-2025 | 90,480 |
| 31 -10-2025 | 90,400 |
| 30 -10-2025 | 90,400 |
| 29 -10-2025 | 90,600 |
| 28 -10-2025 | 88,600 |
| 27-10-2025 | 91,600 |
