சென்னையில் இன்று (நவம்பர் 3) ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலையும் சற்றே அதிகரித்து வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தீபாவளிக்கு முன் ஒரு கிராம் வெள்ளி ரூ.200 தாண்டிய நிலையில் மீண்டும் அதிரடியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.12,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ. 96,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.10,055க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.201க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2,01,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 2-12-2025 | 96,320 |
| 1-12-2025 | 96,560 |
| 30 -11-2025 | 95,840 |
| 29 -11-2025 | 95,840 |
| 28 -11-2025 | 94,720 |
| 27 -11-2025 | 94,160 |
| 26 -11-2025 | 94,400 |
| 25 -11-2025 | 93,760 |
| 24 -11-2025 | 92,160 |
| 23 -11-2025 | 93,040 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 2-12-2025 | 196 |
| 1-12-2025 | 196 |
| 30 -11-2025 | 192 |
| 29 -11-2025 | 192 |
| 28 -11-2025 | 183 |
| 27 -11-2025 | 180 |
| 26 -11-2025 | 176 |
| 25 -11-2025 | 174 |
| 24-11-2025 | 171 |
| 23-11-2025 | 172 |
