கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான இன்று (டிசம்பர் 25) சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.160 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1000 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்த நிலையில் இன்றும் ரூ.1000 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ. 12,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ. 1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.10,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ. 245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ. 2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 24-12-2025 | 1,02,400 |
| 23-12-2025 | 1,02,160 |
| 22-12-2025 | 1,00,560 |
| 21-12-2025 | 99,200 |
| 20-12-2025 | 99,200 |
| 19-12-2025 | 99,040 |
| 18-12-2025 | 99,520 |
| 17-12-2025 | 99,200 |
| 16-12-2025 | 98,800 |
| 15-12-2025 | 1,00,120 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 24-12-2025 | 244 |
| 23-12-2025 | 234 |
| 22-12-2025 | 231 |
| 21-12-2025 | 226 |
| 20-12-2025 | 226 |
| 19-12-2025 | 221 |
| 18-12-2025 | 224 |
| 17-12-2025 | 222 |
| 16-12-2025 | 211 |
| 15-12-2025 | 215 |
