வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2800 உயர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (ஜனவரி 21) ஒரு சவரன் தங்கம் ரூ. 2800 வரை உயர்ந்துள்ளது. இது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரிப்பு, சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றம் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றயை தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.350 உயர்ந்து ரூ.14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 2,800 உயர்ந்து ரூ.1,1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் மொத்தமாக 6,400 வரை உயர்ந்துள்ளது

இதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.11,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி ரூ.22 வரை உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
20-1-20261,11,200
19-1-20261,07,600
18-1-20261,06,240
17-1-20261,06,240
16-1-20261,05,840
15-1-20261,06,320
14-1-20261,06,240
13-1-20261,05,360
12-1-20261,04,960
11-1-20261,03,200
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
20-1-2026340
19-1-2026318
18-1-2026310
17-1-2026310
16-1-2026306
15-1-2026310
14-1-2026307
13-1-2026292
12-1-2026287
11-1-2026275
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share