சென்னையில் இன்று (டிசம்பர் 20) ஒரு சவரன் தங்கம் ரூ.160 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரம், உகலளாவிய தங்கத்தின் தேவை, போர்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலை அவ்வப்போது மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை வரும் 2026ம் ஆண்டில் ரூ.2,00,000 வரை உயர வாய்ப்பு உள்ளது என உலக தங்க கவுன்சில் சிஇஓ டேவிட் டெயிட் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ. 99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.10,345க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.226க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,26,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 19-12-2025 | 99,040 |
| 18-12-2025 | 99,520 |
| 17-12-2025 | 99,200 |
| 16-12-2025 | 98,800 |
| 15-12-2025 | 1,00,120 |
| 14-12-2025 | 98,960 |
| 13-12-2025 | 98,960 |
| 12-12-2025 | 98, 960 |
| 11-12-2025 | 96,400 |
| 10-12-2025 | 96,240 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 19-12-2025 | 221 |
| 18-12-2025 | 224 |
| 17-12-2025 | 222 |
| 16-12-2025 | 211 |
| 15-12-2025 | 215 |
| 14-12-2025 | 210 |
| 13-12-2025 | 210 |
| 12-12-2025 | 216 |
| 11-12-2025 | 209 |
| 10-12-2025 | 207 |
