தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சற்றே குறைந்த நிலையில் இன்று (ஜனவரி 2) மீண்டும் அதிரடியாக விலை உயரத் தொடங்கி உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலக அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 4000 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.140 வரை உயர்ந்து ரூ. 12,580 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ. 1,00,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.115 வரை உயர்ந்து ரூ.10,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 உயர்ந்து ரூ.2,60,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 1-1-2026 | 99,520 |
| 31-12-2025 | 99,840 |
| 30-12-2025 | 1,00,800 |
| 29-12-2025 | 1,04,160 |
| 28-12-2025 | 1,04,800 |
| 27-12-2025 | 1,04,800 |
| 26-12-2025 | 1,03,120 |
| 25-12-2025 | 1,02,560 |
| 24-12-2025 | 1,02,400 |
| 23-12-2025 | 1,02,160 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 1-1-2026 | 256 |
| 31-12-2025 | 257 |
| 30-12-2025 | 258 |
| 29-12-2025 | 281 |
| 28-12-2025 | 285 |
| 27-12-2025 | 285 |
| 26-12-2025 | 254 |
| 25-12-2025 | 245 |
| 24-12-2025 | 244 |
| 23-12-2025 | 234 |
