சென்னையில் இன்று (டிசம்பர் 11) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.160 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தை விலை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றைய தினம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 வரை உயர்ந்துள்ளது வெள்ளி விலை இன்று ஒரு கிலோ ரூ.2000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.12,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.96,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.10,045க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.209க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 உயர்ந்து ரூ.2,09,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 10-12-2025 | 96,240 |
| 9-12-2025 | 96,000 |
| 8-12-2025 | 96,320 |
| 7-12-2025 | 96,320 |
| 6-12-2025 | 96,320 |
| 5-12-2025 | 96,000 |
| 4-12-2025 | 96,160 |
| 3-12-2025 | 96,480 |
| 2-12-2025 | 96,320 |
| 1-12-2025 | 96,560 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 10-12-2025 | 207 |
| 9-12-2025 | 199 |
| 8-12-2025 | 198 |
| 7-12-2025 | 199 |
| 6-12-2025 | 199 |
| 5-12-2025 | 196 |
| 4-12-2025 | 200 |
| 3-12-2025 | 201 |
| 2-12-2025 | 196 |
| 1-12-2025 | 196 |
