இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Monisha

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 28) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம்

தீபாவளி பண்டிகை நெருக்கத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 28) குறைந்துள்ளது. நேற்று (அக்டோபர் 27) ஒரு சவரன் தங்கம் ரூ. 37,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையிலிருந்து இன்று ரூ. 80 விலை குறைந்து ரூ. 37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10 விலை குறைந்து ரூ. 4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம்

ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 41,408-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மாற்றமில்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. 8 கிராம் வெள்ளி நேற்று ரூ. 508-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 1.60 விலை உயர்ந்து ரூ. 509.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 63.70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 63,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ட்விட்டர் நிறுவன தலைகளுக்கு ஆப்பு: அதிரடியில் இறங்கிய எலான் மஸ்க்

கோவை கார் வெடிப்பு: போலீஸ் விசாரணையில் புது தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share