ஒரே நாளில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (பிப்ரவரி 28) ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.2400 உயர்ந்து விற்பனை செய்யப்படுவது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான போர்ப் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் கடந்த இரண்டு நாட்களாக சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக ஒரு கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 2400 உயர்ந்து ரூ.1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.260 உயர்ந்து ரூ.13,010க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

ADVERTISEMENT

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
27-2-20261,19,200
26-2-20261,19,360
25-2-20261,19,440
24-2-20261,19,120
23-2-20261,18,880
22 -2-20261,17,440
21-2-20261,17,440
20-2-20261,15,360
19-2-20261,16,000
18-2-20261,13,840

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

27-2-2026295
26-2-2026295
25-2-2026295
24-2-2026290
23-2-2026300
22-2-2026290
21-2-2026290
20-2-2026270
19-2-2026270
18-2-2026260
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share