நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்.. 2ஆவது நாளாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (பிப்ரவரி 6) ஒரு சவரன் தங்கம் ரூ.1600 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்களிடையே சற்றே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்த வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.200 குறைந்து ரூ.14,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1600 குறைந்து ரூ.1,12,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.150 குறைந்து ரூ. 12,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
5-2-20261,14,560
4-2-20261,19,200
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
31-1-20261,19,200
30-1-20261,26,800
29-1-20261,34,400
28-1-20261,24,880
27-1-20261,19,680
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
5-2-2026300
4-2-2026320
3-2-2026300
2-2-2026300
1-2-2026320
31-1-2026320
30-1-2026405
29-1-2026425
28-1-2026400
27-1-2026387
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share