தமிழகத்தில் இன்று (ஜனவரி 22 ) தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்றே சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 215 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலக அளவிலான தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை, உலக நாடுகளுக்கிடையேயான போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 215 குறைந்து ரூ. 14,200 க்கு விற்பனை செய்யடுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,720 குறைந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 100 குறைந்து ரூ. 11,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ. 3,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 21-1-2026 | 1,15,320 |
| 20-1-2026 | 1,11,200 |
| 19-1-2026 | 1,07,600 |
| 18-1-2026 | 1,06,240 |
| 17-1-2026 | 1,06,240 |
| 16-1-2026 | 1,05,840 |
| 15-1-2026 | 1,06,320 |
| 14-1-2026 | 1,06,240 |
| 13-1-2026 | 1,05,360 |
| 12-1-2026 | 1,04,960 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 21-1-2026 | 345 |
| 20-1-2026 | 340 |
| 19-1-2026 | 318 |
| 18-1-2026 | 310 |
| 17-1-2026 | 310 |
| 16-1-2026 | 306 |
| 15-1-2026 | 310 |
| 14-1-2026 | 307 |
| 13-1-2026 | 292 |
| 12-1-2026 | 287 |
