ஆட்டம் காட்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver

சென்னையில் இன்று (பிப்ரவரி 21) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.260 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஒரு சவரன் தங்கம் ரூ.2,640 வரை குறைந்த நிலையில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.640 வரை குறைந்து ரூ.1,15,360க்கு விற்பனையானது. இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 260 வரை உயர்ந்து ரூ.14,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.2,080 உயர்ந்து ரூ. 1,17,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் நேற்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 270க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ. 290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 20,000 உயர்ந்து ரூ. 2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
20-2-20261,15,360
19-2-20261,16,000
18-2-20261,13,840
17-2-20261,14,560
16-2-20261,15,520
15-2-20261,16,480
14-2-20261,16,480
13-2-20261,15,200
12-2-20261,16,800
11-2-20261,18,320

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

20-2-2026270
19-2-2026270
18-2-2026260
17-2-2026265
16-2-2026265
15-2-2026280
14-2-2026280
13-2-2026280
12-2-2026300
11-2-2026300
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share